பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு..!

மிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் களம் காண்கிறது.

 

பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் வேட்பாளர் பட்டியலிலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ஜேபி நட்டா தலைமையில் இன்று மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

 

இதில் பங்கேற்க டெல்லி புறப்பட்டு சென்றுள்ள மாநில தலைவர் முருகன் மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனைக்குப் பின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.