பாம்பின் உடலில் சிரிக்கும் இமோஜி..! நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை..!

பார்ப்போர் அச்சம் கொள்ளும் உயிரினமான பாம்பு தனது உடலிலேயே சிரிக்கும் இமோஜியை கொண்ட காரணத்தினால் நான்கரை லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.

 

ஆனாலும் பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்கும் சில ஆர்வலர்களும் உள்ளனர். தீண்டி விடுமோ என்று அச்சம் தரும் பாம்பு தனது உடலில் சிரிக்கும் இமோஜி முகத்தை கொண்டிருந்தால் எப்படி இருக்கும் இயற்கைக்கு சவால் விட்டு தனது முயற்சியால் அச்சம் கொள்ளும் பாம்பின் உடலில் இமோஜியை படைத்துள்ளார் 19 வயதான இளைஞர் ஒருவர்.

 

ஜியார்ஜியாவை சேர்ந்த ஜஸ்டின் பாம்பு உள்ளிட்டவைகளை செல்லப்பிராணியாக வளர்ப்பதுடன் அவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். பாம்புகள் மீது ஆர்வம் கொண்ட ஜஸ்டின் வித்தியாசமான நிறங்களிலும் வடிவங்களிலும் அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முயன்றுள்ளார்.

 

சுமார் 8 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு தனது பரிசோதனையில் வெற்றியும் கண்டுள்ளார். அமைச்சர் வெள்ளை மலைப்பாம்பின் உடலில் மரபியல் திறன்களை ஏற்பட ஜஸ்டின் புதுமையான பாம்பை உருவாக்கியுள்ளார். மலைப் பாம்பின் உடலில் தங்கம் போன்று நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தை கொண்டு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

 

பாம்பின் உடலில் மூன்று சிரிக்கும் இமோஜி போன்றது உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்த ஜஸ்டின் உடலில் சிரிக்கும் எமோஜி கொண்ட பாம்பின் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.