பள்ளத்தாக்கில் பேருந்து..! பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்..!

ஹிமாச்சல் பிரதேசத்தில் பள்ளத்தாக்கிற்கு விலகி இருந்த பேருந்தை தனது உயிரைப் பணயம் வைத்து மற்ற பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன .

 

சிர்நீர் மாவட்டத்தின் ஷில்லாங் பகுதியில் 22 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் டயர் திடீரென வெடித்தது .தடுமாறிய பேருந்து சாலையோர தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் விழ இருந்தது.

 

ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிரைவர் பிரேக் போட்டதால் பேருந்து சாலைக்கும், பள்ளத்தாக்கிற்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது.

 

அப்போது பள்ளத்தாக்கில் விழு இருந்த பேருந்தை டிரைவர் கட்டுக்குள் கொண்டுவந்து பயணிகள் 22 பேரும் வெளியேறும் வரை பிடித்து வைத்திருந்தார். பேருந்தில் இருந்து வெளியேறிய பயணிகளை பத்திரமாக மீட்ட தாக கூறப்படுகிறது.