நெற்றிக்கண் படத்தின் ஸ்னீக்பிக் காட்சிகள் வெளியானது..!

யன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் ஸ்னீக்பிக் எனும் முன்னோட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மலீந்திரா இயக்கத்தில் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் நெற்றிக்கண்.

 

சைக்கோ த்ரில்லர் கதையை சுற்றி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

 

பார்வை குறைபாட்டுடன் வில்லனிடம் இருந்து தப்பித்து அவரை எப்படி நயன்தாரா பழிவாங்குகிறார் என்று எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.