நீருக்கடியில் நடிகர் விஜய்யின் ஓவியத்தை வரைந்த கல்லூரி மாணவர்..!

நீருக்கடியில் நடிகர் விஜய்யின் ஓவியத்தை வரைந்த பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன்.

 

தனியார் கல்லூரியில் கட்டட வடிவமைப்பு துறையில் பயின்று வரும் இவர் இளம் வயதில் ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு ஓவியங்களை பல்வேறு பொருட்களைக் கொண்டு வரைந்து சாதனை படைத்துள்ளார்.

 

3 ஆயிரம் முத்தங்களால் ஸ்டாலின் ஓவியத்தையும், திருக்குறள் வரிகளால் கருணாநிதி ஓவியத்தையும், நெல்மணிகளால் அப்துல்கலாம் ஓவியத்தையும் வரைந்துள்ளார். ஜெயலலிதா ஓவியத்தையும் வரைந்துள்ளார். இது புதிய முயற்சியாக விஜய்யின் ஓவியத்தை 6 அடி கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் வண்ணப்பூச்சு மூலம் வரைந்துள்ளார்.