நீட் தேர்வு தோல்வியால் பூச்சிமருந்து குடித்து தற்கொலை..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நீட் தேர்வு தோல்வியால் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

கூடலூர் அருகே அருளானந்தம் – புஷ்பா தம்பதியின் இரண்டாவது மகள் ஜெயா. சிறுவயதிலிருந்தே மருத்துவ கனவுடன் இருந்த ஜெயா கடந்த வருடம் நீட் தேர்வு எழுதியதில் தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த வருடமும் நீட் தேர்வு எழுதியதில் தோல்வி அடைந்தார்.

 

இதன் காரணமாக தொடர் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உதகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். இதன் பின்னர் அவர் கிடைத்த கடிதத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்காக பெற்றோர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் மாணவி எழுதி வைத்துள்ளார்.