நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா..!

நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 மாணவர்களுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அங்கு தொடர்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.