மதுரையில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று இளைஞர்கள் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அபி கண்ணன்.
இவர் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வேளையில் தனக்கன்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று சாலையில் மற்ற வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.