நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

ட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்துள்ளது.

 

மீரா பேச்சுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து மீரா மிதுன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், சாதி, மதம் தொடர்பாக விரோத உணர்வை தூண்டுதல் பொது அமைதியை குலைக்க முயற்சித்தல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.