நடிகை ஜெனிலியாவுக்கு கையில் ஏற்பட்ட ஃப்ராக்சர்

யக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003ல் வெளியான பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதையடுத்து சச்சின் சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தங்களது குறும்புத்தனமான நடிப்பால் பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

 

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என இவருக்கு ரசிகர் படை அதிகமாக இருந்தது. 2012இல் ஹிந்தி நடிகர் ரிஷி தேஷ்முக்கை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். கடைசியாக இவர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான இட்ஸ் மை லைஃப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்த நிலையில் ஜெனிலியா ஸ்கேட்டிங் செய்யும் போது தனது கையை பிராக்சர் செய்துள்ளார். இதை தன்னுடைய இணையதளத்தில் ஒரு வீடியோவாக ஷேர் செய்தார். ஜெனிலியா சில வாரங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங் சென்று தனது குழந்தைகளுக்கு கம்பெனி கொடுக்க நினைத்து இப்படி நடந்து விட்டதாக கூறியுள்ளார்.