தொப்புள் கொடி அறுக்கப்படாமல் சாலையில் கிடந்த குழந்தையை பாதுகாத்த நாய்குட்டிகள்..!

த்தீஷ்கரில் பிறந்த பச்சிளம் குழந்தையை தாய் வீசிச் சென்ற நிலையில் குழந்தையை நாய் தனது குட்டிகளுடன் சேர்த்து பாதுகாத்துக் கொண்டிருந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சத்தீஷ்கர் மாநிலம் குறிப்பிட்ட இடத்தில் நாய்கள் சுற்றி வந்து கொண்டிருந்ததை கண்ட கிராம மக்கள் அங்கு சென்று பார்த்த பொழுது ஏழு நாய் குட்டிகளுக்கு மத்தியில் பிறந்த பச்சிளம் தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனையடுத்து அந்த பகுதி மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைகளுடன் நாய்க்குட்டி இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.