தெலுங்கானா மாநிலத்தில் மூன்று பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 9 மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் தெலுங்கானாவில் 7 வயது குழந்தைக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கென்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும், சமாலியா நாட்டை சேர்ந்த ஆண் பயணி ஒருவருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் உள்நாட்டு விமான நிலையத்தில் மேற்குவங்கம் சென்ற பயணி ஒருவரின் ஏழு வயது குழந்தைக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.