தென்னாப்பிரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு கடந்த வாரம் தொற்று 20 ஆயிரமாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 15 ஆயிரமாக குறைந்துள்ளது.
இதனால் ஓமிக்ரானால் ஏற்பட்ட புதிய உச்சத்தை தென் ஆப்பிரிக்கா கடந்து விட்டதாக அந்நாட்டு மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக வைரஸ் பரவலான ஓமிக்ரான் பாதிப்பு பத்து நாட்களில் குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
ஓமிக்ரானால் பெருமளவு உயிரிழப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ள மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர்.