துரத்தி துரத்தி 30 பேரை கடித்த நாய்..!

விழுப்புரம் அருகே இரவில் போது பொதுமக்களை நாய் துரத்தி துரத்தி கடித்ததில் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள மந்தக்கரை காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது அங்கிருந்த சுவரில் தெருநாய் அங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி கடித்ததில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் நாயை பிடித்து சென்றனர்.