கொல்கத்தா நகரில், ரயில்வே கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; பலருக்கு காயம் ஏற்பட்டது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா நகரில் உள்ள ஸ்டிராண்ட் சாலைப் பகுதியில் ரயில்வேயின் பல அடுக்கு கட்டிடம் உள்ளது. நேற்றிரவு இந்த கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன. ஆனால், கொளுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்தது.
கட்டிடத்தில் தீ விபத்து13வது தளத்தில் ஏற்பட்டதாலும், குறுகிய இடமாக இருந்ததாலும் தீயை போராடி அணைக்க வேண்டியதாயிற்று. இந்த கோர விபத்தில் தீயணைப்பு வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கொல்கத்தா தீ விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள், 2 ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் மரணம் வருத்தம் அளிக்கிறது. கு அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த சோக சம்பத்தில் மாநில அரசுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும். தீ விபத்து தொடர்பாக ரயில்வே துறையின் 4 முக்கிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களை கொண்டு உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.