திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு பதவி வழங்கப்பட்டது..!

ண்மையில் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு பதவி வழங்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணை செயலாளராக கோவையை சேர்ந்த மகேந்திரன் நியமிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் மகேந்திரன் இணைந்து பணியாற்றுவார் என்றும் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

பிறகு கமல்ஹாசனுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.