திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து..!

நாக்பூரில் சாலையில் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்டூர் பகுதியிலிருந்து சீதா பகுதிக்கு சென்ற பேருந்தில் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.

 

இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பேருந்தில் பயணித்த 45 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 


திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!

புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த மனோகர் கடலூர் நோக்கி சென்றுள்ளார்.

 

கிருமாம்பாக்கம் நான்கு மணி சந்திப்புக்கு சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த மனோகர் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கினார்.

 

ஒரு சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மனோகர் உயிர் தப்பிய நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.