கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தாயின் கண் முன்னே ஏரியில் மூழ்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தார். காட்டுநெமிலி கிராமத்தை சேர்ந்த வசந்தி தனது 3 வயது பெண் குழந்தை தர்ஷனை கூட்டிக்கொண்டு ஏரியில் துணி துவைப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது தர்ஷன் எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்த நிலையில் விரைந்து சென்று குழந்தையை மீட்டு வசதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.