தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு..!

குப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட 41 பேரின் மாதிரிகளில் 31 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு முதலில்ஓமிக்ரான் தொற்று உறுதியானது. இது தவிர வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட மேலும் 49 பேருக்கு எஸ் ஜீன் டிராப் உறுதியாகியுள்ளது.

 

எனவே, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விமான பயணிகள் உட்பட எஸ் ஜீன் டிராப் உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.