தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாபேட்டையில் உள்ள ரெஜினா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 460 மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 20 பேருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.