டிஜிட்டல் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி நில மோசடி ..!

டிஜிட்டல் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி நில மோசடி செய்த விவகாரத்தில் 2 கோட்டாட்சியர்கள் தபால் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

2015 முதல் 2019 ஆண்டுவரை பெரியகுளம் கோட்டாசியராக பணியாற்றிய ஆனந்தி மற்றும் ஜெயப்பிரதா ஆகிய 2 பேரின் டிஜிட்டல் கையெழுத்து தவறாக பயன்படுத்தி நில மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதன்பேரில் கோட்டாட்சியர் காவல் நிலையத்தில் தபால் மூலமாக புகார் அளித்தனர். அதில் சிலர் தங்களின் டிஜிட்டல் கையெழுத்தை மற்றும் பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தி ஆவணங்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாரிகளின் இந்த புகாரை தொடர்ந்து மேலும் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.