டான் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் சூரி..!

டிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படபிடிப்பு படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரி, சிவகார்த்திகேயன் இருசக்கர வண்டியில் ஒன்றாக செல்வது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருவரும் மாசாக அசத்தியதை தொடர்ந்து இருவரும் இணைந்து நடிப்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.