ஜே.பி நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன..!

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் பத்தாம் தேதி தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார்.

 

அந்த நிகழ்வுகள் அனைத்தும் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கடந்த மாதம் தமிழகம் வந்து தேர்தல் பரப்புரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பரப்புரைக்காக வரவுள்ளதாகவும் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார். இந்த முறை பிரதமர் தென் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.