“செய்துவிட்டு செத்துமடி” எனக்கூறிய முதலமைச்சர்..!

ஜிஎஸ்டி வரி முதல் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு சரிவர தருவது இல்லை என குற்றம் சாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் கொத்தடிமையாக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார் என்பதை மாற்றி விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

சென்னை மாதவரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14வது மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர் பேச்சைக் குறைத்து செயலில் காட்டுங்கள் எனவும், டூ அண்ட் டை எனவும் தெரிவித்தார்.

 

அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம் என்றும், அரசு ஊழியர்கள் இல்லை எனில் அரசாங்கம் இல்லை என்று கூறிய முதலமைச்சர் திமுக ஆட்சி அமைந்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதும் துணை நிற்பதாக குறிப்பிட்டார்.

 

கடந்த 10 ஆண்டுகளில் நிதிநிலை மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டி அவர் 5 லட்சம் கோடி கடன் சுமை இருந்தபோதிலும் புதிய வேலைவாய்ப்புகளைப் உருவாக்கியதாக தெரிவித்தார். முதல் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு சரியாக வழங்கவில்லை என்றும் கொத்தடிமைகள் போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.