சென்னை சைதாப்பேட்டையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடந்தது.

 

பொது வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வரவேண்டும் அதேபோல பாதுகாப்புக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரியப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடந்து கொண்டு வருகிறது.

 

அடையாறு காவல் துறை துணை ஆணையர் விக்ரமன் தலைமையிலான காவல்துறையினர் இந்த அணிவகுப்பை வழிநடத்திச் சென்று கொண்டுள்ளனர். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஒன்பது வாக்குசாவடிகளில் பதற்றமான நிலைமை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

அந்த பதற்றமான வாக்குச்சாவடிகள் இருக்கக்கூடிய தெருக்கள் முழுவதுமாக காவல்துறையினரும் துணை ராணுவமும் தஅணிவகுப்பை நடத்தியுள்ளனர்.