சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான இன்ஜின் ஆயில் 350 பெண் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது..!

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணை புதூர் பகுதியிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டீலர் ஸ்ரீ பகவதி பெட்ரோல் பங்கில் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த பெண் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 280.00 மதிப்புள்ள இன்ஜின் ஆயில் 350 பேருக்கு ரூ.98. ஆயிரம் மதிப்பில் இலவசமாக அடிக்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன் தலைவர் காதர் பாட்ஷா, அமைப்புச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பெட்ரோல் பங்க் உரிமையாளர் தனசேகர், இந்தியன் ஆயில் டிஸ்ட்ரிபியூட்டர் ஆரவல்லி ஏஜென்சிஸ் மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிங் கணேஷ் குமார், புரமோட்டர் புருஷோத்தமன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் மட்டும் 350 பெண் வாடிக்கையாளர்களுக்கு இன்ஜின் ஆயில் இலவசமாக மாற்றி தரப்பட்டது. முடிவில் அட்வகேட் கவிதா நன்றி கூறினார்.