கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இயக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சி விலகியது, திரை ரசிகர்கள் அதிர்ச்சி அளித்து இருந்த நிலையில், தற்போது அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலில் மூத்த சினிமா பத்திரிக்கையாளர் அளித்த பேட்டியில், ரஜினி 173 படத்திலிருந்து சுந்தர் சி விலகியதற்கு சம்பள பிரச்னை தான் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.
கமல் அலுவலகத்தில் இருந்து சுந்தர் சி-க்கு சுமார் 30 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ஆனால் சுந்தர் சி தரப்பில் ஏற்கனவே அந்த சம்பளம் பெற்று வருவதால், கூடுதல் சம்பளம் கேட்கப்பட்டது. ஆனால் கமல் தரப்பில் குறிப்பிட்ட சில இயக்குனர்கள் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் டிரெண்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. இதைக்கேட்ட சுந்தர் சி படத்தில் இருந்து விலகுவதாக கூறி இருக்கிறார்.
ஆனால் இந்த விவகாரம் எதுவும் ரஜினி மற்றும் கமலுக்கு தெரியாது. ரஜினி பயங்கர ஷாக் ஆகிவிட்டார். பின்னர் ரஜினி தரப்பில் சுந்தர் சி தரப்பிடம் பேசப்பட்டது. குறிப்பாக குஷ்பூவிடம் பேசப்பட்டது. பின்னர் சுந்தர் சி-யிடம் குஷ்பூ இது பெரிய வாய்ப்பு நீங்கள் பண்ணலாமே என கூறியதற்கு, சுந்தர் சி இது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்கிறேன், நீங்கள் தலையிட வேண்டாம் என உறுதியாக கூறியிருக்கிறார்.
சுந்தர் சி இந்தப் படத்தில் மீண்டும் இணைய கமல் தரப்பு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். ஆனால் சுந்தர் சி இதில் இணையாமல், விஷால் படத்தில் பணியாற்றவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கமலுக்கும் இது பெரிய அதிர்ச்சியாக தான் இருந்தது. ராஜ்கமல் நிறுவனத்தில் இருந்து சமாதான முயற்சிகள் தொடர்வதாக தெரிகிறது. இருப்பினும் இன்னும் 2 நாட்களுக்குள் சுந்தர் சி-யா, புதிய இயக்குனரா என்ற தகவல் வெளியாகி விடும்.
ரஜினிக்கு இது மிகப்பெரிய ஷாக். ஏற்கனவே அவர் வெளியேறிய சம்பவம் போல் இது இருப்பதால், அவர் இதற்கான காரணத்தை இந்நேரம் அறிந்துக் கொண்டு இருப்பார். சுந்தர் சி-யின் ஈகோவை யாரோ கிளப்பிவிட்டார்கள் என்பது ரஜினிக்கு தெரிந்திருக்கும். கமலுக்கு இனிமேல் தான் தெரிய வரும்.
ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படத்தை ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கும். ரஜினிக்காக புதிய கதையை தேடுவதற்கு பதிலாக, சுந்தர். சி கதையை வாங்கி வேறு இயக்குனரை வைத்து படத்தை எடுக்க வாய்ப்புள்ளது. இன்னும் 2 நாட்களில் அறிவிப்பு வெளிவரும்.






