கிருஷ்ணகிரி அருகே கோழிக்கொண்டை வடிவில் சிகை அலங்காரம் செய்த சிறுவனை சலூன் கடைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர் முடி திருத்தம் செய்ய வைத்துள்ளார். பூசாரிபட்டி பகுதியில் கோழிக்கொண்டை வடிவில் சிகை அலங்காரத்துடன் சிறுவன் ஒருவன் சுற்றித்திரிந்து உள்ளான்.
அப்போது அந்த வழியாக வந்த காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் அந்த சிறுவனை முடிதிருத்தும் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அவனுக்கு சீராக முடி திருத்தம் செய்யப்பட்டது. தேம்பி அழுத சிறுவனின் காணப்பட்ட சிறுவனின் காதில் இருந்த கடுக்கனும் கழற்றப்பட்டது.