கொரோனா ஒழிய விளக்கேற்றி பூஜை..!

ஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 17 ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படும்.

 

திருவிழா தொடங்கிய முதல் நாளில் உலக அமைதி, கொரொனாவில் இருந்து விடுதலை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் விளக்கு ஏற்றப்பட்டது. இதில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருவிளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.