குவாட் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர்..!

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்டோர் பங்கேற்கும் குவாட் நாடுகளின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கூட்டு ராணுவ பயிற்சிக்காக இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

 

இந்த கூட்டம் கொரொனா காரணமாக முதன்முறையாக காணொளி மூலம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலிய பிரதமர், மோடி, ஜப்பான் பிரதமர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

 

இந்த கூட்டத்தில் இந்திய பசிபிக் பிராந்தியத்தின் கூட்டமைப்பு, கடல்சார் பாதுகாப்பு காலநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி அமிர்தம் ஆமோச்சவம் என்ற பெயரில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

டெல்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.