காதல் மனைவியை எரித்துக் கொலை செய்த கணவன்..!

துரையில் திருமணமாகி ஐந்து நாட்களில் காதல் மனைவியை எரித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ராயபுரத்தை சேர்ந்தவர் கிளாடிஸ். இவர் ஜோதிமணியை காதலித்து வந்த நிலையில் ஐந்து மாதம் கருவுற்று உள்ளார்.

 

இது பெற்றோருக்கு தெரிய வரவே ஜோதி மணியை அழைத்து பேசி உள்ளனர். ஆனால் ஜோதிமணி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதில் காதல் மனைவியை காணவில்லை என ஜோதிமணியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரித்துள்ளனர்.

 

அப்போது விசாரணையில் கிளாடிஸ் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரிய வரவே ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர்.