காதல் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்து வீசிய தந்தை..!

ர்நாடக மாநிலம் மைசூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட சொந்த மகளின் தாலியையே தந்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மைசூர் மாவட்டம் ஆராதனா கிராமத்தை சேர்ந்த சைத்ரா என்பவர் கலரா கிராமத்தை சேர்ந்த மகேந்திரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்ய சென்றுள்ளனர்.

 

அப்போது அலுவலகத்திற்கு உள்ளே வந்த சித்ராவின் தந்தை பசவராஜ் நாயர் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் மகனின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து வீசி மகளை அழைத்து செல்ல முற்ப்பட்டார். அப்போது பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி காவல் தம்பதியினரை மீட்டனர்.

 

தொடர்ந்து தங்களை காப்பாற்ற கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.