கள்ள நோட்டு கொடுத்து ஆடு வாங்கிய கும்பல்..!

செஞ்சி ஆடு சந்தையில் வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்து மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் ஆடு வியாபாரி காத்தவராயன் ஆடை விற்க வந்துள்ளார்.

 

அந்த இருவரும் ஆடு ஒன்றை 16 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை பேசி முதியவர் காத்தவராயனிடமிருந்து வாங்கியுள்ளனர். அதிகாலையில் பனி மூட்டமாக இருந்தால் அவர்கள் கொடுத்த பணத்தை காத்தவராயன் சரி பார்க்க முடியவில்லை.

 

இதில் சிறிது நேரம் கழித்து சென்ற 23,500 ரூபாய் நோட்டுகளை எடுத்து பார்த்தபோது அவை போலியானது என்பது தெரியவந்தது. காத்தவராயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.