கமல்ஹாசன் பிக் பாசில் கிடைக்கும் சம்பளத்திலே பறக்கலாம்..!

வேட்பு மனு தாக்கல் செய்த பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். பணம் இருப்பவன் தான் அரசியல் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை ஒழிக்கவில்லை என்றால் முதலாளிகளின் லாப தேவைக்கான அமைப்பாக இது மாறிவிடும் என கூறியுள்ளார்.

 

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனம் உள்ளவன் வெல்லமுடியும் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகவில்லை என்றால் தீய ஆட்சியே தொடரும் தூய ஆட்சி மலராது எனவும் கூறியுள்ளார்.

 

அப்போது மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் குறித்து கேள்வி கேட்டபோது அவருக்கு பிக்பாஸ் சம்பளமே போதும் கமல் பறக்கலாம் என அவர் கூறியுள்ளார்.