கடை முன் நிறுத்தப்பட்ட பைக்கை திருடி சென்ற வாலிபர்..!

காங்கேயத்தில் கடை  முன்னிறுத்தப்பட்ட பைக்கை திருடி சென்ற வாலிபர் கோவை மாவட்ட போலீசார் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் குறுஞ்செய்திகள் போலீஸாரிடம் வசமாக சிக்கினார்.

 

காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள இரும்பு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடந்த வாரம் கோவை மாவட்டம் திருமங்கலத்தில் முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி பைக்கின் உரிமையாளரான சிவகுமாரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

 

இதனால் உஷாரான பைக் உரிமையாளர் சிவக்குமார் காங்கேயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பின் அப்பகுதிக்கு சென்ற காங்கேயம் போலீசார் திருடிய வழக்கில் ஜாலியாக உலா வந்த திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி யை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரை கைது செய்தனர்.