உலகிலேயே அதிக பட்சமாக இங்கிலாந்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானுக்கு இங்கிலாந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நாளொன்றுக்கு பதிவாகி வரும் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தொட்டுள்ளது. புதிதாக 93 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அதில் 10 ஆயிரத்து 59 பேருக்கு புதிதாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஓமிக்ரானுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு மருத்துவ மனைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. கிறிஸ்மஸ் நெருங்கி வரும் வேளையில் உடனடியாக ஓமிக்ரான் குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக லண்டன் மேயர் தெரிவித்துள்ளார்.