இங்கிலாந்திலும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் என்பது 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சமாக அதிகரித்துள்ளது.
கொரொனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரொனா பாதிப்பில் இருந்து இதுவரை 96 லட்சத்து 58 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
தற்பொழுது கொரொனா பாதிப்புடன் 12 லட்சத்து 92 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் மாறுபாட்டின் அதிவேக பரவலால் கடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.