உணவு தாமதமாக வந்ததால் ஆர்டரை கேன்சல் செய்ய சொன்ன பெண்ணை தாக்கிய ஜோமெட்டோ டெலிவரி பாய்..!

பெங்களூருவில் ஜோமேட்டோ நிறுவன டெலிவரி பாய் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒப்பனைக் கலைஞராக பணியாற்றும் பெண் ஜோமேட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

 

ஆனால் உணவு குறிப்பிட்ட நேரத்திற்குள் வராமல் தாமதமாக வந்ததால் உணவு ஆர்டரை ரத்து செய்யும்படி டெலிவரி பாயிடம் கேட்டார். ஆனால் அதனை மறுத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மூக்கில் ரத்தம் வடிய வடிய ட்விட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஜோமேட்டோ தங்களின் உள்ளூர் அதிகாரி உங்களை தொடர்புகொண்டு மருத்துவ உதவி வழங்குவார்கள் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாது என்று உறுதியளித்தனர்.