இளம் வீரரை கன்னத்தில் அறைந்த மல்யுத்த சம்மேளன தலைவர்..!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மல்யுத்த சம்மேளன தலைவர் இளம் வீரரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த போட்டி ராஞ்சியில் நடந்தது.

 

இந்த போட்டியில் பங்கேற்க வந்த வீரர் ஒருவர் 15 வயதை தாண்டியவர் என்பதால் விளையாட்டு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.

 

இதையடுத்து அந்த தலைவரிடம் முறையிட இதனால் ஆத்திரமடைந்த அவர் மேடையிலே அந்த இளம் வீரரை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.