நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் இருளில் மின்னும் இந்த மூன்று வகை சுறா மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அரிய வகை மீன் இனங்கள் சுமார் 660 முதல் 3 ஆயிரத்து 300 அடி வரை கடலின் அந்தி மண்டலத்தின் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மூன்று வகை உயிரினங்களில் கைட்வின் என அழைக்கப்படும் சுறா மீன் வகைகள் சுமார் 6 அடி நீளத்திற்கு வளரக் கூடியதாகவும் அதுவே மிகப்பெரிய முதுகெலும்பு கொண்ட ஒரு வகை உயிரினம் எனவும் கூறப்பட்டுள்ளது.