இன்று 15வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்..!

மிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 15வது மேலாக தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

 

இதில் வழக்கத்தை விட கூடுதலாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி 15வது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.

 

இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோன்று இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அறிவித்துள்ளது.