இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் எஞ்சாயி என்ஜமி பாடல்..!

காடுகளிலும் மேடுகளிலும் வாழ்ந்த ஆதிக்குடிகள், பூர்வ குடிகளும் அவனது இடத்தை விட்டு இடம்பெயர சொல்லிவிட்டு அவர்கள் பாதுகாத்த இயற்கையை இன்று குத்திக் கொலை செய்து கொண்டிருக்கிறோம் என்ற கருத்தைக் கூறுவது தான் என்ஜாயி எஞ்சமி பாடல்.

 

இந்த பாடல் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கர்ணன் படத்தில் கண்டா வரச்சொல்லுங்க என கண்ட புராணம் நாட்டுப்புற போக்கிலான பாடல்களை தந்து வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் என்ஜாய் எஞ்சமி பாடலின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.

 

இந்த விழாவில் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகியும் வேற லெவல் ட்ரெண்டாகி வருகிறது. குக்குகுக்கூ என தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீயும் தெருக்குரல் அறிவும் பாடியுள்ளனர்.

 

ஏ சண்டக்காரா, ரவுடிபேபி, சூரரைப்போற்று படத்தில் காட்டு பயலே, ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட என தமிழகம் தாண்டிய பல ஹிட் பாடல்களை பாடியவர் தான் தீ.தெருக்குரல் அறிவு மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங், நட்பே துணை படத்தில் சிங்கிள் பசங்க போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.