ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்..! 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்பு..!

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் இருபத்தி ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.

 

தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்து சுமார் 50 அடி ஆழத்தில் மண்ணில் சிக்கினான். ராணுவம், காவல்துறையினர் மாவட்ட அதிகாரிகள் உட்பட பலரும் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

 

தொடர்ந்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு சிறுவன் சுவாசிப்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.


ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்ட பெண் குழந்தை..!

த்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஒரு வயது ஆன பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டார். தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட இந்த ஆழ்துளை கிணறு அலட்சியமாக மூடப்படாமல் திறந்து இருந்த நிலையில் அதன் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அதில் சுமார் 15 அடி ஆழத்தில் விழுந்து மண்ணில் சிக்கியது.

 

ராணுவம், காவல்துறை மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். குழந்தை சுவாசிப்பதற்காக ஆள் துளைக்குள் பிராண வாயு செலுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.