ஆன்மா சாந்தி அடைய சடலத்தின் மீது அமர்ந்து சிறப்பு யாகம் செய்த அகோரி..!

திருச்சியை சேர்ந்த அகோரி ஒருவர் கங்கை கரையில் உள்ள மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து யாகம் நடத்தியுள்ளார். காசியில் பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் திருச்சியில் காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில் மார்கழிமாத மண்டல பூஜைக்காக காசிக்கு சென்றால் அகோரிகளுடன் கங்கை கரையில் உள்ள மயானத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து சிறப்பு யாகத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.