ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அஷ்வராவ் பேட்டையிலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜங்காரெட்டி கூடத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஜெல்லெருவாகு என்ற இடத்தில் செல்லும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்று பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 5 பெண்கள், ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சென்ற காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்த மாநில ஆளுநர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.