ஆணும் பெண்ணும் சமம் என மாணவ, மாணவியருக்கு ஒரே சீருடை..!

ரசு பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் பள்ளி சீருடையில் பாலின பாகுபாடு அகற்றும் விதமாக மாணவர்களுக்கு பாலினப் பாகுபாடற்ற சீருடையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி பள்ளிகளில் மாணவ, மாணவியர் இருவருக்கும் நீல நிற பேண்ட் அளிக்கப்பட உள்ளது.

 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேண்ட் தரப்படுகிறது. பள்ளிகளில் மாணவிகளிடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாணவிகளும் இதனை பாராட்டுகின்றனர்.