அமைச்சரை சந்திக்க வந்த மாணவிகள் மீது போலீசார் தடியடி..!

ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சரை சந்திக்க வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தன்வந்த் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை செய்ய கேட்டு தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க வேண்டுமென அவர்கள் போராட்டம் நடத்தினார். அதிகாரிகளுக்கும், மாணவிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைந்து போகச் செய்தனர்.