அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது என எச்சரித்துள்ளார் மம்தா பானர்ஜி..!

ங்கத்தில் ஜனநாயகத்தை மீட்டு எடுப்பதாக சபதம் எடுத்து உள்ள மம்தா பானர்ஜி அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது என எச்சரித்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நாளில் கூட்ட நெரிசலில் மம்தா பானர்ஜி காயமடைந்தார்.

 

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர் காலில் கட்டுப்போட்டுக் கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கொல்கத்தாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார்.

 

ஹஸ்ரா எனுமிடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி மக்கள் மீண்டும் தமது கட்சிக்கு வாக்களித்தால் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதாக உறுதியளித்தார்.வங்கத்திற்கு எதிரான அனைத்து செயல்களும் முறியடிக்கப்படும் என தெரிவித்தார். அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது என எதிர்க்கட்சியினருக்கு எச்சரித்துள்ளார்.