சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’பிரின்ஸ்’ தீபாவளிக்கு வெளியாகும்..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் எஸ்.கே. படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனந்தீப் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்திருக்கிறார்.
சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





