ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே அனுமதி – உப்பளம் மைதானத்தை வளைத்த தொண்டர்கள்
புதுச்சேரி த.வெ.க கூட்டத்திற்கு 5000 பேர் மட்டுமே க்யூஆர் கோடு மூலமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு பாஸ்களும் வழக்கப்பட்டது.
ஒரு பாஸ் வைத்திருந்தால் 2 பேர் அனுமதி என்று சொல்லப்பட்டதாகவும், அதனால் பலர் கிளம்பி வந்துவிட்டதாகவும், இங்கு தற்போது ஒரு பாஸ் வைத்திருந்தால் ஒருவர் மட்டும் அனுமதி என்று கூறப்பட்டுள்ளதால், உப்பளம் மைதானத்தில் பல தொண்டர்கள் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயல்வதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.





